இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடனும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மானியமும் அடங்கும் என்று இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிபடுத்தினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் இன்று (23) காலை நடந்த கலந்துரையாடலின் விவரங்களை வெளிப்படுத்தியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பட்டார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் எஸ்.ஜெய்சங்கள் குறிப்பிட்டார்.
















