கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாளான்று கோ டவுனில் (Co Down) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாங்கூரின் சிப்பண்டேல் அவென்யூ பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வடக்கு அயர்லாந்து பொலிஸார் புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாட்சியங்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை செவ்வாய்க்கிழமை இரவு வடக்கு அயர்லாந்தின் பான்பிரிட்ஜில் (Banbridge) முகமூடி அணிந்த கும்பலால் நபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியமை தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
லுர்கன் சாலை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே அவர் பலரால் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்களில் ஒருவர் ஹோட்டலுக்கு முன்னால் ஒரு காரில் இருந்து இறங்கி அந்த நபரின் முகத்தில் ஒரு திரவத்தை வீசிய பின்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.














