இங்கிலாந்தில் ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கான புதிய விதிமுறைகள் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வருகின்றன.
அதன்படி, இனிவரும் காலங்களில் 100 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள ஆளில்லா விமானங்களை வெளியில் பறக்கவிட விரும்புவோர் கட்டாயமாக ஆன்லைன் கோட்பாடு தேர்வில் தேர்ச்சி பெற்று பறப்பாளர் அடையாள அட்டையை (Flyer ID) பெற வேண்டும்.
கேமரா பொருத்தப்பட்ட கருவிகளின் உரிமையாளர்கள் தங்களைச் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் பதிவு செய்து இயக்குனர் அடையாள அட்டையையும் (Operator ID) பெறுவது அவசியமாகும்.
சிறுவர்கள் இந்தத் தேர்வை எழுதும்போது பெரியவர்களின் மேற்பார்வை தேவைப்படுவதோடு, விதிகளை மீறுவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றங்கள், வான்வெளிப் போக்குவரத்தை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
சரியான முறையில் பதிவு செய்யாமல் அல்லது விதிகளைப் பின்பற்றாமல் ட்ரோன்களை இயக்குவது சட்டவிரோதச் செயலாகக் கருதப்படுகிறது.




















