ஒரு முக்கியமான அச்சுறுத்தலில் இருந்து தங்கள் சாதனங்களைப் பாதுகாக்க, அனைத்து ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களும் உடனடியாக அண்மைய புதுப்பிப்புகளை (UPDATE) நிறுவுமாறு ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
மிக தீவிரமான இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை “மிகவும் நுணுக்கமான” சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தெரிவித்துள்ளது.
சஃபாரி மற்றும் iOS இல் உள்ள அனைத்து இயக்க முறைமையில் இயக்கும் மென்பொருள் அமைப்பான WebKit இல் இரண்டு முக்கியமான குறைபாடுகள் காணப்பட்டதாக ஆப்பிள் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து நடத்தப்படும் ‘மிகவும் அதிநவீன தாக்குதலின்’ ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆபத்து தீங்கிழைக்கும் வலைத்தளங்களிலிருந்து வருகிறது, அவை உங்கள் சாதனத்தை ஏமாற்றி தீங்கு விளைவிக்கும் வழிமுறைகளை செயல்படுத்தக்கூடும்.
அதாவது ஹேக்கர்கள் உங்கள் iPhone அல்லது iPad ஐக் கட்டுப்படுத்தலாம் அல்லது உங்கள் அனுமதியின்றி குறியீட்டை இயக்கலாம் என்று ஆப்பிள் எச்சரித்துள்ளது.
தானியங்கி புதுப்பிப்புகள் இயக்கப்பட்ட பயனர்களுக்கு, மென்பொருள் திருத்தம் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
ஏனையவர்கள் தங்கள் சாதன அமைப்புகள் மூலம் iOS 26.2 அல்லது iPadOS 26.2 ஐ கைமுறையாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மிகவும் ஆபத்தில் உள்ள சாதனங்களில் iPhone 11 மற்றும் அதற்குப் பின்னரான மொடல்கள், iPad Pro 12.9-inch (3rd generation and later) மற்றும் iPad Pro 11-inch (1st generation and later) ஆகியவை அடங்கும்.
பாதிக்கப்படக்கூடிய ஏனைய மொடல்களில் iPad Air (3rd generation and later),iPad (8th generation and later), மற்றும் iPad mini (5th generation and later). ஆகியவை அடங்கும்.
இந்தக் குறைபாடுகள் பூஜ்ஜிய-நாள் (zero-day) பாதிப்புகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன – அதாவது அவை மென்பொருள் படைப்பாளர்களுக்குத் தெரியாது மற்றும் ஒரு இணைப்பு இருப்பதற்கு முன்பே ஹேக்கர்களால் சுரண்டப்படலாம்.
ஆப்பிள் மற்றும் கூகுளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு உள்ளிட்ட பாதுகாப்பு குழுக்கள் இந்த விடயங்களை கண்டறிந்துள்ளதுடன், இந்த தவறு பேரழிவு தரும் சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளன.
இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் யார் உள்ளார்கள் அல்லது எந்த நபர்கள் குறிவைக்கப்பட்டனர் என்பதை பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி ஆப்பிள் வெளியிடவில்லை.
எனினும், சம்பவங்களை தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், அண்மைய பாதுகாப்பு இணைப்புகளுடன் சாதனங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் தொழில்நுட்ப நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


















