ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று குற்றாம் சாட்டியுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் நிறைவேற்றப்பட்ட 2019 ஈரானிய சட்டம், வொஷிங்டனின் வழியைப் பின்பற்றும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளிக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒட்டாவாவின் ரோயல் கனடிய கடற்படையை இந்தச் சட்டத்தின் எல்லைக்குள் வருவதாகக் தெஹ்ரான் கருதுவதாகவும், இதன் விளைவாக, அதை ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.
















