பெருவின் புகழ்பெற்ற (Machu Picchu) மச்சு பிச்சு சுற்றுலாத் தளத்திற்கு அருகில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு ரயில்வே ஊழியர் உயிரிழந்ததுடன் மற்றுமமேலும் முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் பிரித்தானிய குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த பகுதியைச் சுற்றியுள்ள ரயில் சேவைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த மோதலுக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்கா நாகரிகப் பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சேதமடைந்த ரயில் பெட்டிகளின் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவம் உலகின் மிக முக்கியமான தொல்பொருள் ஆய்வுத் தலங்களில் ஒன்றான இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















