கொழும்பு பங்குச்சந்தையின் நாளாந்த வர்த்தக நடவடிக்கைகள் இன்று (07) காலை 9.53 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று முதன்முறையாக பங்குச்சந்தையில் இரண்டாம் நிலை சந்தை வர்த்தகத்தை ஆரம்பித்த வெல்த் ட்ரஸ்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட சில அசாதாரண கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவே, இவ்வாறு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.















