அட்லாண்டிக் பெருங்கடலில் புதன்கிழமை (08) வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட இரண்டு எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது.
கைப்பற்றப்பட்ட கப்பல்களில் ஒன்று ரஷ்யாவின் கொடியின் கீழ் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது அமெரிக்காவில் எண்ணெய் ஓட்டத்தை ஆணையிடுவதற்கும் வெனிசுலாவின் சோசலிச அரசாங்கத்தை ஒரு நட்பு நாடாக மாற்றுவதற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆக்ரோஷமான முயற்சியின் ஒரு பகுதியாகும்.
கடந்த சனிக்கிழமை கராகஸில் நடந்த இராணுவத் தாக்குதலில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை சிறைப்பிடித்த பின்னர், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டு, OPEC எண்ணெய் உற்பத்தியாளர்கள் குழுவில் உறுப்பினராக உள்ள தென் அமெரிக்க நாட்டிற்குச் சென்று வரும் கப்பல்கள் மீதான முற்றுகையை அமெரிக்க அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஐஸ்லாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான கடல் வழியாக பயணித்தபோது, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நீடித்த துரத்தலுக்குப் பின்னர் ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பலை அமெரிக்கப் படைகள் புதன்கிழமை கைப்பற்றின.
இந்த நிலையில் ரஷ்ய கொடியின் கீழ் பயணித்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதை மொஸ்கோ கடுைமையாகக் கண்டித்துள்ளது.
மேலும், அமெரிக்கா கப்பலில் உள்ள ரஷ்யர்களை முறையாக நடத்த வேண்டும் என்றும் அவர்களுடன் கப்பலை விரைவாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.


















