இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறை பகுதிக்கு நேற்று புதன்கிழமை (07) வருகை தந்திருந்தார்.
இதன் போது சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிஐரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பிரதேச அபிவிருத்தி சமகால அரசியல் நிலைமை மற்றும் அரசாங்கத்துடன் உள்ள ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
எதிர்காலத்தில் பிரதேசத்தின் கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும் மேம்படுத்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் தொடர்பாக தவிசாளர் வலியுறுத்தினார்.
இதன்போது பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் அரசியல் ஆலோசகர் இன்ஷாப் பக்கீர் மார்கர் சம்மாந்துறை எம்.ஏ.ஹஸன் அலி உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டனர்.















