சைபர் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணைய வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) மேற்பார்வையின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.














