கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை சென்ற யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார்
அதன் போது அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , குறைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் கைதிகள் முன் வைத்த கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசி , அவற்றுக்கான தீர்வினை பெற்று தர விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என கைதிகளுக்கு உறுதியளித்துள்ளார்.














