பாதுகாப்பு காரணங்களுக்காக இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகளை இந்தியாவில் விளையாடாமல் இருக்கு பங்களாதேஷ் எடுத்துள்ள தீர்மானம் குறித்து கலந்துரையாடுவதற்காக, பங்களாதேஷ் வரும் ஐசிசி பிரதிநிதிக்கு விசா வழங்காதிருக்க பங்களாதேஷ் தீர்மானித்துள்ளது.
குறித்த பிரதிநிதி இந்திய நாட்டவர் என்பதே அதற்குக் காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஐசிசி ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் அண்ட்ரூ எஃப். கிரேட் இன்று (17) டாக்கா நகருக்கு வருகை தரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே நிலவும் அரசியல் முறுகல் நிலை காரணமாக, பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் அதிகாரிகள் ஐசிசியிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், போட்டித் தொடரின் அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதால், தமது நிலைப்பாட்டை மாற்ற முடியாது என ஐசிசி வலியுறுத்தியுள்ளது.

















