ஆனந்த் அம்பானிக்கு அறிமுகம் தேவையில்லை; நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் இவர், நன்கு அறியப்பட்ட நபர்.
அண்மையில் தொழிலதிபர் தனது ஆர்வத் திட்டமான வந்தாராவை இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாற்றியதற்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் ஆடம்பர கடிகார தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் அண்ட் கோ (Jacob and Co) கோடீஸ்வரர் அனந்த் அம்பானிக்காக பிரத்தியேக வந்தாரா (Vantara) என்ற கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தனித்துவமான கடிகாரம் விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வனவிலங்கள் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையையும் விலங்கு பாதுகாப்பை அவர் ஏற்றுக்கொண்டதையும் பிரதிபலிக்கிறது.
இந்த கடிகாரம் வெள்ளை தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது 397 விலையுயர்ந்த ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இது ஒரு தனித்துவமானதும் தலைசிறந்த படைப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த கடிகாரத்தின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக அனந்த் அம்பானியின் ஒரு மினி 3D உருவம் வைக்கப்பட்டுள்ளது.
யானை, சிங்கம் மற்றும் புலிகள் போன்ற விலங்குகளுடன் அவர் கடிகாரத்தில் காட்சியளிக்கிறார்.
இது வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அவரது பிணைப்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த கடிகாரத்தில் சுழலும் உருண்டை மற்றும் நகரும் சிறிய விலங்குகள் உள்ளன.
அதிகாரப்பூர்வமாக இந்த சிறப்பு கடிகாரத்தின் விலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
எனினும் சில செய்தி அறிக்கைகள் கடிகாரத்தின் விலை சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று என்று கூறுகின்றன.

‘வனத்தின் நட்சத்திரம்’ என்று பொருள்படும் வந்தாரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் அம்பானி ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு முயற்சியாகும்.
இந்த மிகப்பெரிய வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் இந்தியாவின் ஜாம்நகரில் அமைந்துள்ளது.
மேலும் துன்பப்படும் விலங்குகளை மீட்பது, சிகிச்சை அளிப்பது மற்றும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்திற்குள் 3,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம், 2000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 150,000 க்கும் மேற்பட்ட விலங்குகளைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

















