1986 ஆம் ஆண்டு மெர்சிசைடு (Merseyside) பகுதியில் 21 வயதுடைய டயான் (Diane Sindall) சிண்டால் என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கொலைக் குற்றத்திற்காக பீட்டர் சல்லிவன்(Sullivan) என்பவர் 38 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், நவீன டிஎன்ஏ (DNA) பரிசோதனை அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்துள்ளது.
இதனால் அவர் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து வரலாற்றிலேயே இது மிக நீண்ட காலத் தவறான தண்டனையாகக் கருதப்படுகிறது.
தற்போது காவல்துறையினர் உண்மையான கொலையாளியைக் கண்டறிய புதிய மரபணு ஆதாரங்களைப் பயன்படுத்தி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளியைப் பற்றிய தகவல் தருவோருக்கு £20,000 வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களுக்குப் பின்னர் டயானின் குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தருவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
















