அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுப்பட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி சுமார் 4:40 மணிக்கு (GMT 05:40) கார்கெல்லிகோ ஏரியில் நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு குறித்து உள்ளூர் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறும், உள்ளூர்வாசிகள் உள்ளேயே இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் இறந்துள்ளனர்.
இந்த சம்பவம் சந்தேகிக்கப்படும் குடும்ப வன்முறை தாக்குதல் என்று சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் சிட்னியின் போண்டி கடற்கரையில் 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

















