அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய திருத்தங்களின் அடிப்படையில் இந்த புதிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 08/2025 இலக்க வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் அட்டவணையில் 8 ஆம் வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ள முறையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக, புதிய திருத்தங்கள் மற்றும் விளக்கங்கள் இந்த சுற்றறிக்கையின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன.














