மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்
யாழில். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் சட்ட மூலம் இன்னும் இயற்றப்படவில்லை. அதனை மிக விரைவில் இயற்றி தேர்தலை நடாத்துவதற்கே இருக்கிறோம்.
எந்தவொரு தேர்தலையும் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிற்போட மாட்டாது.
எம்மால் சட்ட மூலங்களை மிக எளிதாக நிறைவேற்றமுடியும். நாடாளுமன்றில் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம். அதற்காக சர்வாதிகாரமாக நடந்து கொள்ள மாட்டோம். ஜனநாயக முறைப்படியே நடந்து கொள்வோம். மக்களின் கருத்துக்களை கேட்டே மாகாண சபை சட்டம் இயற்றப்படும்
ஜெ. ஆர் செய்தது போல நாடாளுமன்றில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக தான்தோன்றி தனமாக சட்டங்களை இயற்ற மாட்டோம். மக்களின் கருத்துக்களை கேட்டு , மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட மூலங்களையே நாடாளுமன்றில் நிறைவேற்றுவோம் என மேலும் தெரிவித்தார்.













