இந்தியாவில் நிபா வைரஸ் தொற்றுகள் பதிவானதைத் தொடர்ந்து, பல ஆசிய நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் கொவிட் பரிசோதனை போன்ற சுகாதார நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து, நேபாளம் மற்றும் தைவான் ஆகியவை பயணிகளுக்கான பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தொற்றுநோய் பரவும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனினும், இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் மட்டுமே அடைாயளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிபா வைரஸ் என்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு தீவிர வைரஸ் தொற்று.
இது பெரும்பாலும் வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றது.
மேலும் இது ஒருவருக்கு ஒருவர் நெருங்கிய தொடர்பு மூலமாகவும் பரவக்கூடும்.
காய்ச்சல், தலைவலி, வாந்தி,சோர்வு, மூச்சுத் திணறல், மயக்கம், நினைவிழப்பு
தீவிர மூளைக்காய்ச்சல் என்பன இதன் அறிமுகுறிகளாகும்.
















