முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீக்கு (Kim Keon Hee) தென் கொரிய நீதிமன்றம் இன்று (28) ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு வருடம் மற்றும் எட்டு மாத சிறைத்தண்டனை விதித்தது.
2024 ஆம் ஆண்டு இராணுவச் சட்டப் பிரகடனத்துடன் தொடர்புடைய செயல்களுக்காக அவரது கணவர் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வணிக உதவிகளுக்கு ஈடாக யூனிஃபிகேஷன் சர்ச்சிலிருந்து பெறுமதியான பரிசுகளைப் பெற்றதற்காக சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கிம்முக்கு தண்டனை விதித்தது.

இலஞ்சம், பங்கு விலை கையாளுதல் மற்றும் அரசியல் நிதி சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கிம்மிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று சுயாதீன வழக்கறிஞர் கோரியதை அடுத்து இந்த தீர்ப்பு வந்தது.
இந்த நிலையில் கிம்மின் தரப்பு சட்டத்தரணிகள், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாகவும், மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிப்பதாகவும் தெரிவித்தனர்.
2024 டிசம்பரில் இராணுவச் சட்டத்தை சுருக்கமாக விதித்ததற்காக யூன் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டில் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

















