அதன்படி,பெப்ரவரி 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
பெப்ரவரி 7ஆம் திகதி உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அணிகள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள இந்தப் போட்டிகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் உத்தியோகபூர்வ பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்க மாட்டாது. ஏனெனில், அதே காலப்பகுதியில் இவ்விரு நாடுகளும் ஒரு இருதரப்புத் தொடரில் விளையாடவுள்ளன. இருப்பினும், இலங்கையின் ‘பயிற்சி அணி’ சில பயிற்சிப் போட்டிகளில் விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கிண்ணத் தொடர் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையிலேயே விளையாடவுள்ளதுடன், இந்திய-பாகிஸ்தான் மோதல் பெப்ரவரி15ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.போட்டிகளின் போது பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிசார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.



















