ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கையூட்டல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தரவரிசையில் இலங்கை உயர் இடத்திலிருந்தாலும், கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை பின்தங்கியே உள்ளது.
இது ஏனைய துறைகளின் தரவரிசையில், பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் எழுச்சியின் முக்கிய கோஷம், கையூட்டல் அரசியலுக்கு எதிரானதாக இருந்தாலும், அந்த குற்றச்சாட்டுக்கள் கையூட்டல் நிறைந்த அரசியல்வாதிகள் மீது மாத்திரமன்றி, கையூட்டல் நிறைந்த அரச அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, அரச அதிகாரிகளும் மக்களின் எழுச்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.
அரச ஊழியர்கள், மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கக் கடமைப்பட்டுள்ளதால் அரச அதிகாரிகள் நேர்மையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் 121ஆவது இடத்தில் உள்ள நிலையில், இந்தியா 93 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 135 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 149 இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.













