மெலனியா டிரம்ப் பற்றிய ஆவணப்படத்தின் பிரீமியர் காட்சியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா பற்றிய ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரட் ராட்னர் இயக்கிஉள்ள இந்த ஆவணப்படத்தை பெர்னாண்டோ சுலிச்சின், மார்க் பெக்மேன் ஆகியோருடன் இணைந்து மெலனியா டிரம்ப்பும் தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படம் நேற்று வெளியானது. அமெரிக்காவின்
47-வது அதிபராக கடந்த ஆண்டு ஜனவரி20-ல் டிரம்ப் பதவியேற்றார். அதற்கு முந்தைய, 20 நாட்களில் நடந்த விடயங்களைக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் இதில், முக்கியமான அரசியல் தருணத்தில் நாட்டின் முதல் பெண்மணியான மெலனியா பற்றிய பார்வையை இப்படம் வழங்குகிறது. உலகளவில் திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படத்தின் பிரீமியர், வாஷிங்டனில் நடந்தது.
டிரம்ப், மெலனியா கலந்துகொண்ட இந்நிகழ்வில் முக்கிய அரசியல், திரையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொள்ள இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரும் கலந்துகொண்டார்.

















