78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் பிரதேச செயலாளர் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின உரையினை மேற்கொண்டார்.
இதில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எஸ்.அமீர் அலி திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்.ஏ.எல்.ஏ.மஜீத் நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



















