• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/13
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய இரு வரலாற்றுப் புகழ்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 15 ஆவது “இந்துக்களின் சமர்” (Battle of the Hindus) கிரிக்கெட் பெருவிழா இன்று (13) காலை கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இந்துக் கல்லூரி கொழும்பின் 75 ஆவது ஆண்டு பவள விழாவினை சிறப்பிக்கும் வகையில் இம்முறை இப்போட்டி மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இன்று காலை 08:30 மணி அளவில் ஆரம்பமான இந்நிகழ்வில், பாடசாலை இசைக்குழுக்களின் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மற்றும் இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து, தேசியக் கொடி மற்றும் இரு பாடசாலைகளினதும் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, தேசியக் கீதம் மற்றும் பாடசாலைக் கீதங்கள்   இசைக்கப்பட்டு போட்டிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன. 

இந்துக் கல்லூரி கொழும்பின் அதிபர் மற்றும்  இளையதம்பி இளங்கேஸ்வரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ரத்தினம் செந்தில்மாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆரம்ப நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் நடைபெறும் இந்தப் போட்டி இன்றும் நாளையும் (மார்ச் 13 மற்றும் 14) நடைபெறவுள்ளது. 

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா இரு அணி வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அதனைத் தொடர்ந்து நாணய சுழற்சி இடம்பெற்றதுடன் நாணய சுழற்சியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியினர் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். 

காலை 9:55 மணிக்கு ஆட்டம் ஆரம்பமான நிலையில், இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பெருந்திரளானோர் மைதானத்தில் திரண்டு தமது அணிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 

பாரம்பரியமும் கௌரவமும் மிக்க இந்த 15-வது வரலாற்றுச் சமரில் கிண்ணத்தை வெல்லப்போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

Related

Tags: Battle of the Hindusஇந்துக்களின் சமர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!

Next Post

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

Related Posts

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!
இலங்கை

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

2026-03-18
Next Post
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

0
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

0
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.