• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கான அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

போர்ச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் குறிப்பாக அந்த நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி ஏற்படுவது இலங்கையின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, போரில் சம்பந்தப்படாத மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தனது கவலையை தெரிவித்ததுடன், அத்தகைய தாக்குதல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறிப்பாக வலுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறைக்கும் அந்நாடுகள் வழங்கும் பங்களிப்பை இதன்போது பாராட்டினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவிலான இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தி செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதேபோன்று, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக தனி நாடாகவும், ஒன்றிணைந்தும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க இலங்கை வழங்கக்கூடிய அதிகப்பட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு மேலும் தெரிவித்தார்.

May be an image of text

May be an image of the Oval Office, dais and text

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவரும், அரபு நாட்டுத் தூதுவர்கள் கவுன்சிலின் தலைவருமான Khaled Nasser Sulaiman AlAmeri, இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் Khalid Hamoud Nasser Alkahtani, இலங்கைக்கான ஓமான் தூதுவர் Ahmed Ali Saeed Al Rashdi, இலங்கைக்கான எகிப்து தூதுவர் Adel Ibrahim, இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் Ihab I.M. Khalil மற்றும் இலங்கைக்கான கட்டார் நாட்டுத் தூதுவர் Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari, கொழும்பிலுள்ள ஈராக் தூதரகத்தின் பொறுப்பதிகாரி Anmar A.A. Al-Emin, கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தின் பதில் பொறுப்பதிகாரி Abdullah A.M.A. Almuhana மற்றும் கொழும்பிலுள்ள லிபியத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி Faek B.T. Aboud, ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

Related

Tags: அநுரகுமாரஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

Next Post

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

Related Posts

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
Next Post
இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

நோர்வூட் - கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

0
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04

Recent News

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.