ஈரானுடனான போர் தொடர்பாக இரு நீண்டகால நட்பு நாடுகளுக்கும் இடையே ஆழமான பிளவுகள் நிலவும் இக்காலகட்டத்தில், ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நிச்சயமற்ற தன்மையும் மோதல்களும் நிறைந்த ஒரு காலகட்டத்திலும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் பிரிட்டனும் அமெரிக்காவும் எப்போதும் உறுதியான பங்காளிகளாக ஒன்றுபட்டு விளங்கும் என்று மன்னர் சார்லஸ் செவ்வாயன்று (28) அமெரிக்க காங்கிரஸிடம் தெரிவித்தார்.
செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய ஒரு அரிய உரையின்போது மன்னர் சார்லஸ்,
நமக்கிடையே என்ன வேறுபாடுகள் இருந்தாலும், என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஜனநாயகத்தைக் காக்கவும், நமது மக்கள் அனைவரையும் தீங்கிலிருந்து பாதுகாக்கவும், நமது நாடுகளுக்காகத் தினமும் தங்கள் உயிரைப் பணயம் வைப்பவர்களின் துணிச்சலுக்கு வணக்கம் செலுத்தவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று கூறினார்.
மேலும், அரசியல் சார்பற்றது என பக்கிங்ஹாம் அரண்மனை முன்னரே தெரிவித்திருந்த ஓர் உரையில் சார்லஸ், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேட்டோவை விமர்சித்ததைக் குறிப்பிட்டதுடன், ரஷ்யாவுடனான போரில் உக்ரேனுக்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான உதவியின் முக்கியத்துவத்தையும், தனிமைவாதத்தின் அபாயங்களையும் எடுத்துரைத்தார்.
அத்துடன், 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களைக் குறிப்பிட்ட சார்லஸ், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நமது மக்கள் இரண்டு உலகப் போர்கள், பனிப்போர், ஆப்கானிஸ்தான் மற்றும் இன்று நமது பகிரப்பட்ட பாதுகாப்பை வரையறுத்த தருணங்கள் என அனைத்திலும் தோளோடு தோள் நின்று செய்தது போலவே, நாமும் ஒன்றிணைந்து அந்த அழைப்பிற்குப் பதிலளித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

















