கடந்த 22 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை வீழ்ச்சி கொழும்பு, கெஸ்பேவ பகுதியில் பதிவாகியுள்ளது.
அதன்படி, அங்கு 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர, கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொட பகுதியில் 145.5 மி.மீ. மழை வீழ்ச்சியும், வத்துப்பிட்டிவலாவில் 105.5 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கிளிமலை பகுதியில் 121 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பண்டாரகமவில் 102.5 மி.மீ மழை வீழ்ச்சியும், ஹொரானையில் 101.5 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.












