இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
இதில் அனுபவம் வாய்ந்த விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்லா மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார்.
தனஞ்சய டி சில்வா அணிக்குத் தலைமை தாங்குவார், அதேவேளையில் கமிந்து மெண்டிஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத குசல் மெண்டிஸுக்குப் பதிலாக, டிக்வெல்ல விக்கெட் காப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணியில் பத்தும் நிசங்காவும் இடம்பெறவில்லை.
துடுப்பாட்ட வரிசையில் லஹிரு உதார, நிஷான் மதுஷ்கா, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டாரா மற்றும் சோனல் தினுஷா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சுழற்பந்து வீச்சுத் தேர்வுகளில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூரிய ஆகியோருடன் இணைந்து கேஷர நுவந்தாவும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சுப் பிரிவில் மிலன் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–27 சுழற்சியின் ஒரு பகுதியாகும்.
இலங்கை அணி விபரம்
தனஞ்சய டிசில்வா (தலைவர்), லஹிரு உதார, நிஷான் மதுஷங்க, கமந்து மெண்டீஸ் (உப தலைவர்), தினேஷ் சந்திமால், பஷிந்து சூரியபண்டார, சோனல் தினுஷா, நிரோஷன் திக்வெல்ல (wk), ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, கேஷர நுவந்த, மிலான் ரத்நாயக்க, அஷித பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷவ பெர்னாண்டோமற்றும் தில்ஷான் மதுஷங்க.







