• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!

சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/12
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள் ஆன்மீக பயணமாக இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் – தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.

சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய ஆதீன கர்த்தாவான சுப்பிரமணியம் தியாகராஜா தலைமையில் கடந்த 10 ஆம் திகதி காலை சித்தாண்டியில் இருந்து பேரூந்து மூலம் ஆன்மீக யாத்திரைப் பயணத்தை ஆரம்பித்த அவர்கள் மாலை யாழ். காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் சிவன் கோவிலுக்கு வருகை தந்தனர்.

11 ஆம் திகதி அதிகாலை காரைநகர் சிவன் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக பொன்னாலை வழியாக கடற்கரை பாதையூடாக பல்வேறு ஆலயங்களையும் தரிசித்துக் கொண்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தினை வந்தடைந்தனர்.

கீரிமலையில் இருந்து இன்று 12 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்துக் கொண்டு காலை தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தினை வந்தடைந்துள்ளனர்.

இன்று நள்ளிரவு இடம்பெறும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றத்தினை தரிசித்து தங்கள் ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு பேரூந்தில் கிழக்கு மாகாணம் திரும்புகின்றனர்.

குறித்த பாதயாத்திரை தொடர்பில் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய ஸ்தாபகரான சுப்பிரமணியம் தியாகராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணம் நோக்கிய இந்த ஆன்மீகப் பயணமானது மிகவும் முக்கியமானது. நாங்கள் குழுவாக வருடந்தோறும் ஆறுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரைகளை மேற்கொள்கின்றோம். எங்கள் குழுவில் வயதானவர்களில் இருந்து மிக இளவயதுடையவர்கள் வரை ஆண்கள், பெண்கள் எனப் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர். இப்படியான ஆன்மீகப் பயணங்கள் மூலமாக குறிப்பாக இளையோர்கள் சைவ வாழ்வியலையும், பண்பாட்டையும் நேரடியாக உணர்ந்து அறிந்து கொள்வது மகிழ்ச்சியளிப்பதுடன், மனதையும் உடலையும் புத்துணர்வாக்கவும் இந்தப் பயணம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பானதாகும்.

blank blank

 

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!

Next Post

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

Related Posts

இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?
இலங்கை

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

2026-08-12
கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!
இலங்கை

கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!

2026-08-12
ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்; 22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு தீவிரம்!
இலங்கை

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்; 22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு தீவிரம்!

2026-08-12
வாக்குமூலத்தின் பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ !
இலங்கை

வாக்குமூலத்தின் பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ !

2026-08-12
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-08-12
காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!
இலங்கை

காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!

2026-08-12
Next Post
இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.