• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டலத் தளம்பல், குறைந்த காற்றழுத்தப் பிரதேசமாக உருவெடுத்து, பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வானிலைத் தொகுதியின் தாக்கம் எதிர்வரும் நவம்பர் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் இலங்கையைப் பாதிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடுவதற்குப் போதுமான தரவுகள் தற்போது கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையேற்படின் உரிய எச்சரிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்குக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்தால் இலங்கை கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, இன்று (10) காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம் என்பதால் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related

Tags: Ajith Wijemannagelow pressureஅஜித் விஜேமான்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து;

Related Posts

மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து;
BREAKING

மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து;

2026-11-10
நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!
இலங்கை

நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

2026-11-10
அநுராதபுரத்தில் பேருந்துகள் மோதி விபத்து; மூவர் பலி!
இலங்கை

அநுராதபுரத்தில் பேருந்துகள் மோதி விபத்து; மூவர் பலி!

2026-11-10
நச்சுப் புகைமூட்டத்தில் டெல்லி!
ஆசிரியர் தெரிவு

நச்சுப் புகைமூட்டத்தில் டெல்லி!

2026-11-10
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்கும் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்கும் ட்ரம்ப்!

2026-11-10
முதல் நாளில் வலுவான நிலையில் பாகிஸ்தான்; 2 ஆம்  நாள் ஆட்டம் இன்று!
ஆசிரியர் தெரிவு

முதல் நாளில் வலுவான நிலையில் பாகிஸ்தான்; 2 ஆம் நாள் ஆட்டம் இன்று!

2026-11-10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

0
நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

0
மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து;

மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து;

0
அநுராதபுரத்தில் பேருந்துகள் மோதி விபத்து; மூவர் பலி!

அநுராதபுரத்தில் பேருந்துகள் மோதி விபத்து; மூவர் பலி!

0
நச்சுப் புகைமூட்டத்தில் டெல்லி!

நச்சுப் புகைமூட்டத்தில் டெல்லி!

0
இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; நவம்பர் 15 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

2026-11-10
மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து;

மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து;

2026-11-10
நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

2026-11-10
அநுராதபுரத்தில் பேருந்துகள் மோதி விபத்து; மூவர் பலி!

அநுராதபுரத்தில் பேருந்துகள் மோதி விபத்து; மூவர் பலி!

2026-11-10
நச்சுப் புகைமூட்டத்தில் டெல்லி!

நச்சுப் புகைமூட்டத்தில் டெல்லி!

2026-11-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: