அடுத்த சீசன் முதல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரை முன்னதாகவே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவாஜித் சைகியா குறிப்பால் உணர்த்தியுள்ளார்.
வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்கொள்ளும் கடும் வெப்பம் மற்றும் மே மாதத்தின் பிற்பகுதியில் போட்டிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இத்தொடரை முன்னதாகவே தொடங்குவது குறித்து BCCI மற்றும் IPL நிர்வாகக் குழு ஆகியவை ஆலோசித்து வருவதாக சைகியா தெரிவித்தார்.
அதன்படி, இத்தொடருக்காக மார்ச் 10 முதல் மே 15 வரையிலான காலக்கட்டத்தை தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
















