இலங்கையின் மீன்பிடித்தொழிலை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத இழுவைமடித் தொழிலைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டமூலங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சிறிய படகுகளுக்கு 25 லீற்றரும், பெரிய படகுகளுக்கு 150,000 லீற்றரும் மண்ணெண்ணெய் மானியமாக வழங்கப்படுகிறது.
அத்துடன், கடலில் காணாமல் போவோரை மீட்க ஜப்பான் நிதியுதவியுடன் 2 அதிநவீன மீட்புப் படகுகள் இந்த ஆண்டிற்குள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
நோர்வே மற்றும் ஜப்பானின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் மீன்பிடித்துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், டிட்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு படகுகள் மற்றும் நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் சிக்கலுக்கு இராஜதந்திர ரீதியில் நிலையான தீர்வு காணப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.
















