மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
அனுராதபுரம் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. ஆக இருக்கும். மன்னார் ஊடாக முல்லைத்தீவு முதல் புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலை:
மன்னார் ஊடாக முல்லைத்தீவு முதல் புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாகச் சிலாபம் முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.













