லாஸ் ஏஞ்சல்ஸில் வியாழக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற ஆட்டத்தில், மைக்கேல் ஓயார்சபாலின் இரண்டு கோல்கள் மற்றும் பெட்ரோ போரோ தனது நாட்டுக்காக அடித்த முதல் கோல் ஆகியவற்றின் மூலம் ஆஸ்திரியாவுக்கு எதிராகச் சிறப்பான வெற்றியை ஸ்பெய்ன் பதிவு செய்தது.
இந்த வெற்றியுடன் 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் சூப்பர் 16 சுற்றுக்கு ஸ்பெய்ன் எளிதாக முன்னேறியது.
2010 இல் தென்னாப்பிரிக்காவில் பெற்ற வெற்றிக்குப் பின்னர், உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் சுற்றுகளில் ஸ்பெய்ன் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதற்கான பரிசாக, ஜூலை 6 அன்று டல்லாஸில் நடைபெறவுள்ள காலிறுதிக்கு முன்னைய சுற்றில் போர்த்துக்கல் அணியை அவர்கள் எதிர்கொள்வார்கள்.














