ரத்கமவின் ஓவகந்த (Owakanda) பகுதியில், இன்று (03) காலை கரை ஒதுங்கிய நிலையில் வெள்ளை நிறத்திலான கொள்கலன் ஒன்று (03) கண்டெடுக்கப்பட்டது.
கொழும்பு கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பலிலிருந்து கடலில் விழுந்த காலி கொள்கலனாக இது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
ரத்கம பொலிஸாரின் தகவலைத் தொடர்ந்து, தெற்கு மாகாண கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அக்கொள்கலனைப் பார்வையிட்டனர்.
பின்னர், கடற்கரையில் சிதறிக் கிடந்த ‘ரெஜிஃபோர்ம்’ (regiform) துண்டுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை அவர்கள் அகற்றினர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













