இந்த வருடம் ஆரம்பித்த நாள் முதல் எப்போது இந்தப் படம் வெளியாகும் என காத்திருந்த திரைப்படம் தான் விஜய்யின் இறுதி திரைப்படமான ஜனநாயகன்.
எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் 23 ஆம் திகதி உலகம் முழுவதும் ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
ஆரம்பம் முதல் ரிலீஸ் நாள் வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து படம் வெளியானது.
முழு படமே சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தாலும் விஜய்யின் கடைசிப்படம் என்ற உணர்வால் ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்கு வந்து படத்தை பார்த்தார்கள்.
தமிழகத்தை தாண்டி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாளிலேயே 90 கோடி ரூபாவுக்கும் மேலான வசூலை ஈட்டியது.
படம் வெளியாகி 11 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் ஓவர்சீஸில் 88.2 கோடி ரூபா வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

















