அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டாவ வீதியின் பழைய சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 3,756 லீற்றர் கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 3,756 லீற்றர் கோடா – 20 பீப்பாய்கள், செப்புச் சுருள் ஒன்று, எரிவாயு சிலிண்டர் ஒன்று, கார் ஒன்று, முச்சக்கரவண்டி ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்று, சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏனைய உபகரணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் 36 மற்றும் 38 வயதுடைய வெல்மில்ல மற்றும் பாணந்துறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர் பெண் 30 வயதுடைய மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















