வடக்கு சைப்ரஸ் அருகே ஞாயிற்றுக்கிழமையன்று (30) சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காணாமல் போயுள்ளனர்.
உயிர் பிழைத்தவர்கள் கவிழ்ந்த படகின் அடிப்பகுதியைப் பற்றிக்கொண்டு தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தப் படகு, உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு (09:30 GMT) கைரேனியா (Kyrenia) துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அறியப்படாத காரணத்தால் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது.
எட்டுப் பேர் கொண்ட பணியாளர்கள் உட்பட மொத்தம் 267 பேருடன் சென்ற அந்தப் படகிலிருந்து 241 பேர் மீட்கப்பட்டனர்.
உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் விருப்பமான விடுமுறைக்கால இடமான கைரேனியா (Kyrenia) கடற்கரைக்கு அருகிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது.














