ஜென் Z தலைமுறையினருடன் தொடர்புகொள்ளும் தனது முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ‘பொய்ப் பேச்சு’ பரவி வந்தபோதிலும், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாகச் செயல்பட்டதை எடுத்துக்காட்டும் வகையில், செல்ஃபி பாணியிலான காணொளி ஒன்றை இன்று (01) இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
தனது சுதேசிப் பிரச்சாரத்தை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்காக பிஷ்கெக்கில் இருக்கிறார்.
மேலும், வெளிநாட்டுப் பயணங்கள், வெளியூர் திருமணங்கள் மற்றும் தேவையற்ற தங்கக் கொள்முதல் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ளுமாறும் இந்தியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
திங்களன்று வெளியிடப்பட்ட அரசுத் தரவுகள், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.
இது ரிசர்வ் வங்கியின் (RBI) கணிப்புகளை விஞ்சிய ஒன்றாகும்.
வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும்போதே பிரதமர் உள்நாட்டு விவகாரம் ஒன்றைப் பற்றிப் பேசிய நிகழ்வானதானது மிகவும் அரிதான ஒன்றாகும்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழலில், போர்கள், பாதிக்கப்பட்ட விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொடரும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றிற்கு மத்தியிலும் இந்தியா ஈர்க்கக்கூடிய வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதை பிரதமர் இந்த உரையின் போது குறிப்பாக வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் இந்தப் பதிவு, கடந்த ஜூலை மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மிகப்பெரிய மாணவர் போராட்டங்களுக்குப் பிறகு, இளைஞர்களுடன் தொடர்ந்து தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.













