நிக்கவெரட்டிய நகரில் நேற்று (ஆக.31) நள்ளிரவில் பொலிஸார் நடத்திய ஒரு அதிரடி நடவடிக்கையின் போது, நான்கு அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப் பொருத்தி, அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களின் வயது 18, 19, 20 மற்றும் 22 ஆகும்.
இவர்கள் நிக்கவெரட்டிய, சித்திக்குலியா, கொப்பைகனே மற்றும் துத்திரிப்பிட்டிய ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையில், அந்த நான்கு மோட்டார் சைக்கிள்களும் போலி எண் பலகைகளுடன் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
நிக்கவெரட்டிய பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













