இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய மூத்த அனிமேஷன் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜிவந்த அர்த்தசத் (Givantha Arthasad), தனது 73-வது வயதில் காலமானார்.
பாணந்துரை ஆதார வைத்தியசாலையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூத்த திரைப்பட இயக்குனர் தினேஷ் பிரியசத்தின் சகோதரரான இவர், இலங்கையின் அனிமேஷன் மற்றும் திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அறியப்பட்டவர்.
அனிமேஷன் துறையில் அவர் மேற்கொண்ட முன்னோடிப் பணிகள், இலங்கைத் திரைப்படத்துறையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தன.














