கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2,947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 2,936 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளது.
அதேமாதம் இரண்டாம் திகதி அந்தப் பெறுமதி 2,934 மெகாவோட்டாகப் பதிவாகியிருந்தது.
செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி தினசரி மின்சாரத் தேவை 2,920 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதுடன், ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அது செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரம் வரை உயர்வடைந்துள்ளது.
எனினும், செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3ஆகிய திகதிகளில் முறையே 58.34 மற்றும் 58.08 கிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.













