சொகுசு வாகனம் ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு, ஒக்டோபர் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இவ்வழக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின் கீழ் வருவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இன்றைய நடவடிக்கைகளை நிறைவு செய்த நீதிவான் அமரசேன, இவ்வழக்கின் இறுதி விசாரணைக்காக ஒக்டோபர் 28-ஆம் திகதியை ஒதுக்குமாறு உத்தரவிட்டார்.













