உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான பைனான்ஸிடமிருந்து 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் சொத்துகள் திருடப்பட்ட சைபர் தாக்குதலின் பின்னணியில், வடகொரிய அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர் குழுவொன்று இருப்பதாக நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
TRM Labs மற்றும் Chainalysis ஆகிய பிளொக்செயின் ஆய்வு நிறுவனங்கள், வடகொரியாவுடன் தொடர்புடைய Lazarus Group அல்லது TraderTraitor என்ற ஹேக்கர் குழுவுக்கு இந்தத் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
சர்வதேச தடைகளை எதிர்கொள்ளும் வடகொரியா, வெளிநாட்டு நாணயங்களைப் பெற்றுக்கொள்வதற்காக சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாக நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை வடகொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதற்கு முன்னரும் 2014ஆம் ஆண்டு அமெரிக்காவின் Sony Pictures நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதல் மற்றும் 2022ஆம் ஆண்டு 620 மில்லியன் டொலர் கிரிப்டோகரன்சி திருட்டு ஆகிய சம்பவங்களுடன் வடகொரிய ஹேக்கர்கள் தொடர்புபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும், தொழில்நுட்பத் திறமையுள்ள மாணவர்களைத் தெரிவுசெய்து, உளவுத்துறையின் கண்காணிப்பில் இயங்கும் விசேட ஹேக்கர் குழுக்களில் வடகொரியா இணைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

















