லண்டனில் உள்ள கூகுள் கிளவுட் (Google Cloud) தரவு மையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பிரித்தானியாவில் உள்ள பல வங்கிகளின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் வங்கி மற்றும் முன்னணி வங்கிகள் உள்ளிட்டவற்றின் ஏடிஎம் (ATM) பணப் பரிமாற்றங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் அட்டைப் பயன்பாடுகளில் (Bank card top-ups) திடீர் தடை ஏற்பட்டது.
இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
மின் தடை ஏற்பட்டு சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், பெரும்பாலான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளன.
இணைய சேவைக் கண்காணிப்புத் தளமான Downdetector தகவலின்படி, பிரித்தானியாவில் உள்ள டெலிவரி சேவைகள் மற்றும் அஞ்சல் துறைகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















