ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த விகாரை வளாகத்தில் தேரர்கள் கூடி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் அதனை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது அங்கு பொலிஸாருக்கும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.














