உலகளவில் வாரந்திர கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு, அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், ‘தொடர்ந்து மூன்றாவது முறையாக, கடந்த வாரத்தில் மட்டும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதன் எதிரொலியாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக 12கோடியே 18இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26இலட்சத்து 96ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது கோடியே 82இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.


















