ரயில்வே இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சருடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்ததைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், ரயில்வே சங்கங்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று முற்பகல் 14 அலுவலக ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ரயில்வே இயந்திர சாரதிகளின் போராட்டம் காரணமாக பல பயணிகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.