நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்தின் சென்சார் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதன்படி இந்த திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் படக்குழுவினரால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















