யாழ்.மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 496 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 668 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.